| Enviro Meet January 2012 |
|
|
| Written by osai |
|
ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் 'சூழல் சந்திப்பு' 29.01.2012 அன்று மாலை 6:30 மணியளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் நடைடிபற்றது. இதில், 'யானை வழித்தடப் பாதுகாப்பு - வெற்றி செய்திகள்' என்ற தலைப்பில், இந்திய வன உயிரின அறக்கட்டளை முதுநிலை திட்ட அலுவலர் (வனநிலப் பாதுகாப்பு) திரு.ராம்குமார் , அவர்கள் சிறப்புரையாற்றினார். திரு.ராம்குமார் அவர்கள் பேசியதாவது:ஆசியா, ஆப்ரிக்கா என இரண்டு வகைகளில், மொத்தம் 13 நாடுகளில் யானைகள் உள்ளன. சமீப காலமாக, யானை - மனிதர் இடையே அதிகரித்துள்ள மோதலுக்கு, "வழித்தட ஆக்கிரமிப்பு' தான் முக்கிய காரணம். நம் நாட்டில் யானைகள் வாழ்விடம், ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. யானை வழித் தடத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் இடங்களால், வனப்பகுதியை இணைக்க முடிவதில்லை. நாங்கள் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 88 யானை வழித்தடங்கள் உள்ளதை கண்டறிந்துள்ளோம். தமிழகத்தில் மட்டும் 10 யானை வழித் தடங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் ஒரே இடத்தில் இருந்தால்,தேவையான உணவு, நீர் கிடைக்காது என்ற காரணத்தால் யானைகள் இடம் மாறுகின்றன. யானை வழித்தடங்களை பாதுகாக்க எங்கள் அமைப்பு சார்பில், அறிவிப்பு பலகைகள் அமைத்தல், சுற்றுச்சூழல் அமைப்பினர், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு பயிலரங்கு நடத்துதல், வழித்தடத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வரும் மக்களிடம் பேசி, அந்த இடத்தை மீட்டு வனத்துறைக்கு கொடுத்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் மற்றும் வீடு கட்டி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். யானைகள் தங்கள் உணவுக்காக எதுவும் செய்யும் இயல் புடையவை. வழித்தடத்தை பாதுகாத்தால் மட்டுமே, யானை - மனிதர் இடையே நடக்கும் மோதலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இவ்வாறு, அவர் பேசினார். |
Great Hornbill, (Buceros bicornis) is a colorful bird, having bright yellow and black casque over large beak, lives as monogamous pair for life. Hornbills build their nests in hollows of large tree trunks. Figs are the important source of food for the Hornbill.
இயற்கை காக்கும் எமது பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்