| King Cobra Rescue |
|
|
| Written by osai |
|
கோவை மாவட்டம் வாளையார் அடுத்த க.க.சாவடி பகுதியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. 29.12.2011 அன்று இரவு 10 மணியளவில் இவரது வீட்டு முன்பு ஒரு பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. அங்குள்ள பொந்தில் படுத்துக்கொண்டது. பாம்பு நீளமாக இருந்ததால் அதைப் பிடிக்க அப்பகுதியினர் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பினரை தொடர்பு கொண்டனர். மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு அனுமதியோடு, வனச்சரக அலுவலர் நடராஜன், ஓசை துணை தலைவர் கணேஷ், மகேஷ், செந்தில்குமார் மற்றும் பாம்பு பிடிப்பதில் நிபுணரான ஜிஆர்டி கல்லூரி மாணவர் நிர்மல் மற்றும் ஆர்.வி.எஸ். கல்லூரி மாணவர் ரஞ்சித் ஆகியோர் அங்கு சென்றனர். 20 நிமிட போராட்டத்துக்கு பிறகு பாம்பை நிர்மல் பிடித்தார். அது 14 அடி நீளமுள்ள ராஜநாகம். ஓசை அமைப்பு கணேஷ் கூறும்போது, ‘கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதேபோல ஒரு ராஜநாகம் இப்பகுதியில் பிடிபட்டது. ஈரப்பதமுள்ள பசுமை நிறைந்த வனப்பகுதிகளில் இவை காணப்படும். கொடிய விஷம் உடையவை. யானையை கூட கொல்லும் விஷம் உடையவை. |
Great Hornbill, (Buceros bicornis) is a colorful bird, having bright yellow and black casque over large beak, lives as monogamous pair for life. Hornbills build their nests in hollows of large tree trunks. Figs are the important source of food for the Hornbill.
இயற்கை காக்கும் எமது பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்